நேசம் நாடும் நெஞ்சங்கள்

கல்முனை பொலிஸ் நிலையத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு!.. செ.துஜியந்தன்

கல்முனை பொலிஸ் நிலையத்தினால் ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்   வழங்கிவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி பெறும் குடும்பங்களுக்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றனர். இந்நிலையில் கல்முனை பொலிஸாரும் பொதுமக்களுக்கான மனிதாபிமானப்பணிகளை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை தலைமை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சுமித் பிரியந்த தலைமையில் வாழ்வாதாரத்தை இழந்த சில குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதில்  கல்முனை பொலிஸ் அதிகாரி பத்திக விஜயசுந்தர, பொலிஸ் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி வாஹிட், பெரும்குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
இங்கு கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு பெறுமதிமிக்க உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *