கவிதைகள்

காதலும் கொரோனாவும்!…

காதலா காதலா கவிதையெழுது
எனது ஆருயிர்க்காதலா
நம் காதலும் கொரோனாவால் கரைந்துதான் போனதா?

அன்பே என்ன நீ கதைக்கிறாய்?
கரைய காதலென்ன கடற்கரை மணலில் செய்த உருவமா?
மாயமாய் மறைந்து போய்விட

கைபேசி எடுத்த உடனே ஏன்
அந்த சோக ஒலி கேட்குது?
சோகமாக இங்கே எங்கும் சோகமாகவே இருப்பதால்

உண்மையை சொல்லிடு உனக்கு
சோகம் என்பதில்லையா?
யாரப்படி சொன்னது என் மனம் பூராவும் சோகமே
நெஞ்சைக்கிழித்து காட்டிட நானும் அனுமன் இல்லையே!

கைபேசியிலும் நாம் இணைந்த படமில்லையே அது ஏன்?
கடற்கரை மணலில் விலகிநின்ற படமன்றோ அதில் தெரியுது

இடைவெளியுடன் கூடிய படமும்
தொலைபேசியில் தேவையா?
தப்பாய் எண்ணாதே சர்மிளா
அது சமூக இடைவெளி மட்டுமே

என்னை நீயும் வர்ணித்து கவிதை ஏன் எழுதவேயில்லை?
கவிதை எழுத ஏற்ற நேரமல்ல
அதனால்தான் எழுதவில்லை

காலம் மாறும் அதுவரை காதல்
கவிதை எழுதேன் கண்மணி
கண்ணீர் நீயும் சிந்தாதிருந்திடு
அதுவரை  அழுதிடாமல் நீ இரு!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *