கவிதைகள்

இருண்ட நிலைமாறுமென மருண்டமனம் நினைக்கிறது!.. கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

தடுப்புச்சுவர் அமைத்தாலும் தாண்டியே வரவேனென்று 
          அடம்பிடித்துக் கொரனோவும் ஆக்ரோஷம் கொள்கிறதே
உலகிலிப்போ கொரனோவை ஒழிப்பதற்கு ஆராய்ச்சி
பலநிலையில்  நடந்தாலும் பரவும்நிலை குறையலையே  !
 
           கொரனோவின் அரசாட்சி கொடிகட்டி பறக்கிறதே
           எனையழிக்க யார்வருவார் என்றதுவும்  நினைக்கிறது 
           கொடிபிடித்துக் கொரனோவும் அரசாட்சி செய்வதற்கு
           கொள்கையினை வகுத்தபடி கோருருவம் எடுக்கிறதே  ! 

விஞ்ஞானம் இப்போது விழிபிதுங்கி நிற்கிறது
எஞ்ஞான்று கொரனோவை இல்லாமல் செய்வதென
கொரனோவோ புத்துணர்வு பெற்றெழுந்தே வருகிறது
அநியாயமாய் உயிர்கள் அளவின்றிப் போகிறதே  ! 
 
            வந்தாலும்  தெரியாது தொற்றிடினும் தெரியாது 
            வந்தபின்பும் அறிகுறிகள் தெள்ளெனவே காட்டாது 
            பொல்லாத வடிவத்தை தாங்கிவரும் பேரழிவாய் 
            இவ்வுலகில் கொரனோவும் இப்போது திகழ்கிறதே  ! 
 
            மருந்துவரும் மருந்துவரும் என்கின்ற நினைப்பாலே
            இருண்ட  நிலைமாறுமென மருண்டமனம் நினைக்கிறது 
            அருந்துகின்ற அனைத்தையுமே மருந்தாக்க எண்ணுகின்ற 
            பெருவிருப்பம் மக்களிடம் பேருணர்வாய் எழுகிறது   ! 
 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *