கவிதைகள்

துன்பத்தை விதைக்காதீர்!… சங்கர சுப்பிரமணியன்.

மகிழ்வான செய்தியென்றால்
மனங்குளிர எண்ணி மகிழலாம்
காலமின்றி நேரம் எதவுமின்றி
மகிழ்ந்து கொண்டிருக்கலாம்

துக்கமான செய்தியென்றால்
ஒருநாள் அழலாம் ஒருவாரம்கூட அழலாம்
போதவில்லையெனில் ஒருமாதம் கூட
சோகத்தில் மூழ்கித் தொலையலாம்

கரோனாவோ நமக்கு துன்பமான நிகழ்வுதான்
உங்களுக்கும் எனக்கும் மட்டும்
வந்த துன்பமதுவன்று
உலகிலுள்ள அனைவரையும் உலுக்கி எடுக்கும் துன்பமே
அதிலிருந்து மீழ்வதற்கு ஏற்ற வழி செய்கிறார்

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்
ஒப்பாரி வைத்து ஓலமிடுவதை நாம்விட்டால்
இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போகும் கரோனாவும்
இதுவும் கடந்துபோகும்  என்று நல்லதையே எண்ணுங்கள்

இயல்பு நிலைக்கு மாறுங்கள்
மனதில் இருந்து இறுக்கநிலை அகற்றுங்கள்
கரோனா ஒன்றை மட்டும் சொல்லி சொல்லி
மக்கள் மனதில் மன இறுக்கம் எனும் துன்பத்தை விதைக்காதீர்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *