கவிதைகள்

கரோனாவை ஓட்டிட வா!…. சங்கர சுப்பிரமணியன்.

கந்தா கடம்பா கதிர்வேலா
எந்தனை காக்க சீக்கிரம் வா
வந்திருக்கும் கரோனாவை வதம்செய்ய வா
சுந்தரனே சூரனை வதைத்தவனே

குன்றிலிருக்கும் குமரனே வா
என்றுமே எமைகாக்கும் இறைவா வா
பன்றி காய்ச்சலைப் பதம் பார்த்தவனே
இன்று எம்மை கரோனாவிடம் இருந்து காத்திட வா

சூரனை கொன்ற சுப்ரமண்யா
கரோனாவை ஒழித்திட வாருமய்யா
கோவிலை விட்டு வெளியே வா
கோவிட்டை அழித்து அருளே தா

இருதாரம் கொண்ட எந்தன் முருகா
ஒருதாரம் கொண்ட எம்மை எல்லாம் காத்திட வா
ஆறமுகம் கொண்ட ஆண்டவனே
தாறுமாறாய் திரியும் மக்களை
தனித்து வைத்திட வா

மலைமேல் இருக்கும் மால் மருகா
குலைநடுங்குதே இந்த கரோனாவை எண்ணி
தலையை எடுத்து சூரனைக் கொன்றாய்
நிலைகுன்ற செய்து கரோனாவை ஓட்டிட வா!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *