முகநூல்

கியூபா. உண்மைதான்! பெருமைதான்!

ஆனாலும் சர்வாதிகார முதலாளித்துவத்து அமெரிக்காவிற்கு எதிராக அத்தனையாண்டுகள் போராடிவிட்டு, தம்மை நிலைநிறுத்த உலக வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராக போராடிய தமிழினத்துக்காக ஒரே ஒரு குரலை ஓங்கி கொடுத்திருக்கலாம். எங்கள்தேசத்திலும் விடுதலைவீரர்களின் குருதியால் நிறமேறிய செங்கொடிதானே பறந்தது? அப்போதுகூட தமிழ் இனஅழிப்பு போரை நடாத்திய நாடுகளில் சில ரஷ்ய, சீனா, கொரியா க்குப் பின்னால் ஒளிந்துதானே கிடந்தது இந்த கியூபா. அப்போதும் கூட சித்தாந்தங்களை மறந்துவிட்டு தனக்காக மட்டுமே யோசித்திருந்தது இந்த கியூபா. நல்லவர்களின் மௌனம், தீயவர்களின் அராஜகங்களை விட கொடுமையானது. என்னதான் இருந்தாலும் அமேரிக்கா கியூபா நாடுகளில் குடியேறியவர்களுக்குள் ஓடும் இரத்த மரபணுக்கள் ஒன்றுதானே! அவர்களிடம் இருக்கும் ஆதிக்க மனோபாவம் விட்டுத் தொலையுமா? வரலாற்றை அறியாத எம்மவர் வாய்கள் உன்னை வாழ்த்தலாம். ஆனால் உங்கள் துரோகத்தை எங்கள் சந்ததியிடம் விதைத்தே தீருவோம். உங்கள் இசங்கள் உண்மையாக இருக்கலாம், ஆனால் அதற்குள் ஒளிந்துகொண்டிருக்கும் உங்களுக்கும் முதலாளி நாடுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லவே இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *