கவிதைகள்
நோய் தீர்ப்போர் தெய்வமிங்கே!… சங்கர சுப்பிரமணியன்.

கொரோனாவே கொரோனவே
ஏன் வந்தாய் கொரோனாவே
யாரழைத்து நீ இங்கு வந்தாய்
அழைத்தாரை சொல்லிவிடு
மக்கள்தொகை அதிகமென்று
மாநிலத்தார் அழைத்தாரோ
எமதர்மராசனவன் பசிபோக்க
எல்லா நாடும் நீ சென்றாயோ
மக்கள் செய்த பாவமென்ன
மாண்டுமிங்கே போவதற்கு
பாவக் கணக்கு எழுதுபவரும்
பழுதாய் எழுதிட்டாரோ சொல்
நோய் தீர்க்கவுமே மருந்துமின்றி
சாய்கின்றாரே மாந்தரெல்லாம்
அமிர்தம் வைத்துள்ள அமரர்களே
அனுப்பி வைப்பீர் அதிவிரைவில்
காக்கின்ற தெய்வமெல்லாமிங்கு
கண்மூடி இருக்கையிலே நாம்
யாரிடம்தான் போய் சொல்வோம்
நோய் தீர்ப்போர் தெய்வமிங்கே!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()