கவிதைகள்
குற்றம் சொல்ல ஏதுமில்லை!…. சங்கர சுப்பிரமணியன்.

கல்லூரி வாசலிலே காத்திருந்த
நாட்களெல்லாம்![]()
மெல்ல மெல்ல கண்முன் அதுவாக விரிகிறதே
சொல்லமுடியா சுகமனைத்தும் தருகிறதே
எல்லா நினைவுகளும் இதயமதில் பாய்கிறதே
செக்கச் சிவந்த வானத்தின் கீழ்
சிறகடித்து
திக்கின்றி செல்லும் பறவைகளாக பறந்த காலம்
இக்கணமும் என் மனதில் தேனாய் பாய்கிறதே
ஏக்கமதும் வந்து வந்து என் மனதை தாக்கியதே
ஆற்றுமணல் ஈரத்தில் அழியாத கோலங்களாய்
நேற்றுத்தான் நாம் வரைந்தது போல் இருக்கிறதே
ஊற்றுப்போல் ஓடிவரும் எண்ணம் இப்போததனை
நாற்றுப்போல் ஆடி சொல்கிறதே அதை நம் பெயர்களென்று
நேற்றுவரை இருந்ததெலாம் கானல்நீராய்
ஆற்றமுடியா துயரமாக அடிமனதை தாக்க
வேற்று திசைநோக்கி நாமிருவரும் பறந்து சென்றோம்
ஏற்றிடுவோம்
குற்றம் சொல்ல ஏதுமில்லை
நம் காதல்தான்
நிறைவேறவில்லை!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()