கவிதைகள்

இன்பமாயும் தெரிகிறதே!…. சங்கர சுப்பிரமணியன்.

மரணப்படுக்கை ஒன்றே மனதின் ஆழம்வரை செல்லும்
யாராருடைய வாழ்வில் விளக்கேற்றினோம்
எவருடைய வாழ்வையெல்லாம் அழித்தோமென்று
இன்பமும் துன்பமும் நிச்சயமாய் அப்போதங்கே புரியும்

அப்பாவி மனிதர்களையும் அறிவில்லாத மக்களையும்
நம்பும்வகை கதைசொல்லி நம்பவைத்த நாட்களெலாம்
நம் கண்முன்னே வந்துநிற்கும்
செய்ததை கேள்விகேட்கும்
அப்போதே தெரியும் உனக்கு மேலுலகும் கீழுலகும் அங்கே

இருப்பதையும் இல்லாதையும் அவரவரை அறியவிடாது
உனக்கு தெரியாத ஓன்றை ஊருலகுஅறியாதவொன்றை
அதைச்செய்தாலது கிடைக்கும் இதைச்செய்தாலிது கிடைக்கும்
என்றுமே சொல்லி நம்ப வைப்பின் அதுநலமோ

நான் அப்படி ஏதும் நிச்சயமாய் சொல்லவில்லை
யாருக்கும் எவருக்கும் குருட்டு நம்பிக்கை ஊட்டவில்லை
ஊரை ஏமாற்றி ஒவ்வாத கருத்து ஒன்றும் சொல்லவில்லை
என் உணர்வுகளும் மறைகிறதே
இன்பமாயும் தெரிகிறதே!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *