கவிதைகள்

மரணத்துக்குள் வாழ்வு!…. தம்பி நந்தன்.

கை தவறினால் மரணம்
கால் இடறினால் அங்கவீனம்
தெரிந்தும்
வயிற்றில் எழும் பெரு வலி
போக்க
திருடி, விபச்சாரி
என்ற பட்டம்
சுமக்காமல்

உயிர், உறுப்புகளை
கண்ணி வெடிகளிடம்
பணயம் கொடுத்து
பணம் தேடுவதற்காய்
பசி தீர்ப்பதற்காய்
தினக் கூலிகளாய்
திண்டாடும் நீங்கள்
மேன்மை கொள்
மாணிக்கங்கள்

உங்கள் வாழ்வும்
சிறக்க வேண்டும்
நீங்களும் ஆறடுக்கு
மாளிகையில்
வாழவேண்டும்

உங்களுக்கு மட்டும்
விடியாதா
விடிந்தாலும் வறுமை
தடுக்கிறதா

கண்ணி வெடிகளுடன்
தினம் கதை பேசும்
உங்களுக்காய்
கலங்குகிறேன்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *