கவிதைகள்
நாணமென நானறிவேன்!… சங்கர சுப்பிரமணியன்…. மெல்பேர்ன்.

கார்முகிலில் மறைந்தோடி
கண்சிமிட்டி விளயாடும் நிலா மேகம்விட்டு வெளியேறியதும்
மீண்டும் மீண்டும் மறைவதுபோல்
கார்கூந்தலில் மறைந்த முகம்
கண்சிமிட்டு விளையாடுதிங்கே
கூந்தல்விட்டு வெளியேறியதும்
மீண்டும் அங்கே மறைந்திடுமோ
மேகமங்கே ஓடுவதால் நிலவும் ![]()
மறைந்து விளையாடுதல் போல்
கார்குழல் அதுபோல் விலகாது
உன் காந்தமுகம் மறைந்திடாது
மறையாத முகமதில் தெரிகிறதே
மயங்கியே கண்கள் கவிழ்கிறதே
முறையாக நீயேதும் சொல்லாதே
முடியுமது நாணமென நானறிய!
– சங்கர சுப்பிரமணியன்.
![]()