Featureநிகழ்வுகள்

கல்முனை பிராந்திய சுகாதார சேவை விருது வழங்கும் விழா!

கல்முனை  பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுகாதார விருது வழங்கும் விழா இன்று காலை கல்முனை  பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் கே. சுகுணன் அவர்களின் தலைமையில் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச். எம். அன்சார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதிகளாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீன், கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எம். நஸீர், மாகாண சுகாதார திணைக்களம் கணக்காளர் ஏ.எம்.எம். ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கல்முனை  பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
2018 ஆண்டின் சிறந்த முறையில் சுகாதார சேவை வழங்கிய வைத்தியர்கள், தாதிகள், சுகாதார சேவை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நூருல் ஹுதா உமர். 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *