கவிதைகள்

தைப்புத்தாண்டே வருக!… சங்கர சுப்பிரமணியன்.

புதுப்பானையில் புத்தரிசி கொண்டு
பொங்கும் இனிய பொங்கல்போல
புத்தாண்டில் புதுமை புகுத்தி
இனியவை சேர்ப்போம் நாமும்

கரும்பு இனித்திடும் வாயால்
அரும்பாய் மலரும் சிறாருக்கு
அகிலத்தில் நிலைத்திடும் அழகாம்
இயற்கையை தொழுதிட சொல்வோம்

ஆதவன் நம் வாழ்வுக்கு துணையன்றி
யாதுள வேறிங்கு துணை நமக்கு
உழைத்திடும் பயனே நம் உயர்வு
அதனை திருத்தி சொல்லாதிருப்போம்

போகிப்பண்டிகை என்பதை நாமறிவோம்
பழையன கழிதலே போகியன்றால்
பழுதாய் தொற்றித்தொடரும் மூடப்பழக்கம்
விழுதாய் நின்று ஊன்றிட வழிசெய்யலாமோ

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பர்
உழைப்பே மேன்மை தரும் என்பதறியாது
உண்மைக்கு புறம்பாகச் சொல்லும்
ஊனக்கருத்துக்கு விடை கொடுப்போம் இந்நாளில்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *