இலங்கை

வடக்கு வைத்தியசாலைகளை மத்திய அரசு சுவீகரிக்கக் கூடாது;  அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் அரசாங்கத்தின் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது.அரசாங்கத்தின் அதிகார பகிர்வு கொள்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.எனவே அரசாங்கம் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசுக்கு சுவீகரிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.வடக்கு மாகாணத்தில உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளை மத்திய அரசுக்கு சுவீகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது.

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட வளங்களை மீண்டும் மத்திய அரசுக்கு மீளப்பெறுவதாயின் அரசாங்கத்தின் அதிகார பகிர்வுக் கொள்கை எவ்வாறானதாக உள்ளது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் அரசாங்கத்தின் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது அரசாங்கம் இந்த முயற்சியை கைவிட வேண்டும்

ஆகவே மாகாண சபைகளின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் உள்ள அரச வைத்தியசாலைகளை மத்திய அரசுக்கு சுவீகரிக்காமல், அந்த வைத்தியசாலைகளின் நிலவும் ஆளணி மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *