இந்தியா

டிசம்பர் 16ஆம் திகதிக்குள் பங்களாதேஷைக் கைப்பற்றுவோம்: இந்திய அமைச்சரின் சர்ச்சைக் கருத்து

பங்களாதேஷில் இந்துக்கள் கொல்லப்பட்டமைக்குப் பழிவாங்கும் வகையில், எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்குள் பங்களாதேஷை இந்தியா கைப்பற்றும் என மேற்கு வங்க அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் பட்பாரா பகுதியில்  ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “டிசம்பர் 16ஆம் திகதிக்குள் பங்களாதேஷைக் கைப்பற்றுவோம். இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. பங்களாதேஷில் இந்துக்கள் கொல்லப்பட்ட விதத்திற்குப் பழிவாங்குவது உறுதி” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில் அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி பங்களாதேஷுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் சையத் மொஸம்மல் அலி தெரிவித்துள்ளார்.

எனினும், பங்களாதேஷின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமாயுன் கபீர், ஷேக் ஹசீனா நாடு திரும்ப வேண்டுமானால் நாடு கடத்தல் நடைமுறையின் ஊடாகவே வர வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட்டு கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *