இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் பிணை சீராய்வு மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது பிணை விண்ணப்பத்தை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை மீளாய்வு செய்து, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக அறிவித்தல் விடுக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14-ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவைப் பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார  இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *