இலங்கை

சந்திக்க ஜனாதிபதி அனுமதி தரவில்லை; 2 மாதங்களாக முயல்கிறோம்; சாணக்கியன்

தமிழ் மக்களின் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திக்க இரண்டு மாதங்களாக அனுமதி கோருகின்றோம். ஆனால் அவரை சந்திப்பதற்கு முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இதனால் அவரை சந்திப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்து தருமாறு இலங்கை தமிரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கான செலவீனத் தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவைப் பாராளுமன்றத்தில் சந்திப்பதற்கு அனுமதி கோரினால் அவர் உடனடியாகச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கி கலந்துரையாடுவதாகவும், அதற்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இதன்போது சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டார்.

எனினும், கடந்த இரண்டு மாதங்களாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முடியாத நிலை காணப்படுவதாகவும், மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியிடம் அனுமதி கோரியிருந்தும் இதுவரையில் சந்திப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியால் மாத்திரமே முடியும் என்பதால், குறித்த சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடு செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *