சிறைக்கு சென்றுள்ள நாமல்!; சர்ச்சையை கிளப்பும் எதிர்க்கட்சிக்கு அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

அரச நிதியை மோசடி செய்த குற்றத்திற்காகவே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட கருத்து தொடர்பில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறைக்கு சென்றுள்ள நாமல் ராஜபக்ச
எயார்பஸ் கொள்வனவில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை, கிரிஸ் கொடுக்கல் வாங்கலில் 75 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு அமையவே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
தனிப்பட்ட வெறுப்பை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்துச்செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சிறைக்கு சென்றுள்ள நாமல் ராஜபக்சவுக்காக குரல் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமல் ராஜபக்சவை ஒப்பிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
![]()