கொழும்பில் ‘நிருத்ய சாம்ராட்’ பெருவிழா

இந்தியாவின் லக்னோ நகரில் வாழ்ந்துகொண்டு, ‘கதக்’ (Kathak) நடனக் கலைக்காக முன்னோடிச் சேவையாற்றிய குரு பண்டிட் ஜினதாச விக்ரமசிங்க, இந்திய ‘சங்கீத் நாடக் அகாடமி’ விருதைப் பெற்ற ஒரேயொரு இலங்கையக் கலைஞராவார்.
கதக் நடனக் கலையில் ஒரு புராணமாகத் திகழும் அன்னாருக்குப் புகழாரம் சூட்டும் வகையில், இந்திய குருமார்களின் வழிகாட்டுதலில் கதக் நடனத்தைப் பயின்று இன்றளவும் பயின்றுவரும் கலைஞரும், எக்காலத்திலும் கதக் நடனம் கற்க இந்தியா சென்ற இலங்கை மாணவர்களுள் இந்தியாவில் தொழில்ரீதியாகக் கதக் நடனத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்ற ஒரேயொரு மாணவர் எனப் போற்றப்படுபவருமான ‘எட்வின் விஹான்’ நிறுவனத்தின் கலை இயக்குநரும், பிரபல சாஸ்திரியக் கதக் நடனக் கலைஞரும், நடன அமைப்பாளருமான நிருத்ய விசாகரத், சங்கீத் பூஷன், நிருத்ய சீல ஸ்ரீ விஹங்க ருக்ஷான் குருதேவரின் முதன்மைத்துவத்தில் ‘நிருத்ய சாம்ராட்’ (Nritya Samrat) பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பெருவிழா, கொழும்பு லயனல் வென்ட் அரங்கில், எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி மாலை 7.00 மணிக்குக் நடைபெறவுள்ளது.
பண்டிட் தீபக் மகாராஜ், கலாநிதி ரவிபந்து வித்யாபதி, ஸ்ரீ விஹங்க ருக்ஷான் உள்ளிட்ட முன்னணிப் படைப்பாளிகள் அன்றைய தினம் கதக் நடனத்தால் மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.
அத்துடன், ‘நிருத்ய சாம்ராட்’ பெருவிழாவில் கதக் நடனத்திற்கும் ஏனைய நடனத் துறைகளுக்கும் மகத்தான பங்களிப்புச் செய்த சிறப்பிக்குரிய கலைஞர்களும் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.







![]()