பருத்தித்துறையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்கள் பெற்றோர்கள், உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு பருத்திதுறையில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் வீதியிலிருந்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் பொது ஈகச் சுடர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு அக வணக்கப் பாடல் பாடப்பட்டு மாவீரர் பெற்றோர் உறவுகளால் தங்கள் பிள்ளைகளை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றினர்.அதனைத் தொடர்ந்து மாவீரர் பண்டிதர் அவர்களது தாயார் பொதுக் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியத்தை தொடர்ந்து மாவீரர்கள் பெற்றோர், உரித்ததுடையோர், உறவுகள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் என மாவீரர் பெற்றோர் உறவுகள் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
நினைவுரைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மும்கியஸ்தர் சட்டத்தரணி நா.காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ் உட்பட பலரும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலர் ந.காண்டீபன், பருத்தித்துறை நகரபிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகர பிதா பத்மநாதன், பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன், மற்றும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
![]()