உலகம்

APEC உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதியின் உரையின் போது தூங்கி வழிந்த ட்ரம்ப்

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்களை மூடியபடி தூங்கக் கலக்கத்தில் இருப்பது போன்ற காணொளிக் காட்சிகள் இன்று வியாழக்கிழமை (19) சர்வதேச ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

ஷென்சென் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.

APEC உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதியின் உரையின் போது தூங்கி வழிந்த ட்ரம்ப் | Trump Caught With Eyes Shut During Apec Speech

இச்சந்திப்பில் ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு சுமார் 42 நிமிடங்கள் நடைபெற்றது, மேலும் மும்முனைப் பேச்சுவார்த்தையும் ஒரு மணித்தியாலம் அல்லது அதற்கும் குறைவான நேரமே திட்டமிடப்பட்டிருந்தது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ட்ரம்ப் கண்களை மூடியபடி அமர்ந்திருந்த காட்சிகள் நேரலை மற்றும் சமூக ஊடகக் காணொளிகளில் பதிவாகி, அவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.

அவர் உண்மையிலேயே தூங்கினாரா அல்லது கமரா கோணம் மற்றும் குறுகிய காணொளி காரணமாக அப்படித் தெரிகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என சில தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னதாக செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் ஷி ஜின்பிங் உரையாற்றியபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *