சிவாஜிலிங்கத்துக்கு திருமாவளவன் நேரில் அஞ்சலி

யாழ்.வல்வெட்டித்துறைச் சந்தியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்றையதினம் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான விமானம் நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்த அவர் நேரடியாக வல்வெட்டித்துறை சென்று அஞ்சலி செலுத்தியதுடன், அங்கு இடம்பெற்ற சிவாஜிலிங்கத்தின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் அஞ்சலிக் கூட்டத்திலும் பங்கேற்று அஞ்சலி உரை ஆற்றினார்.
அவருடன் பழ.நெடுமாறனின் செயலாளர் ஆவல் கணேசனும் வல்வெட்டித்துறை நகரில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
![]()