இலங்கை

மற்றொரு வழக்கிலும்  பிணை கிடைத்தும் நாமல் உள்ளே; குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்ய முன்மொழியப்பட்டதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் போது, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 41 பேர் மீது நேற்று (16) குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசுக்குச் சொந்தமான இந்த இரண்டு சொத்துக்களையும் விற்பனை செய்ய முன்மொழியப்பட்டதை எதிர்த்தே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி துமிந்த முடுன்கொடுவ, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரூபா ரொக்கப் பிணையையும், தலா 500,000 ரூபாய்க்கான இரு பிணையாளர்களின் உத்தரவாதத்தையும் வழங்கி அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 35ஆவது பிரதிவாதியாக உள்ள நாமல் ராஜபக்ச, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெறவுள்ள மற்றொரு வழக்கிற்காகச் செல்ல வேண்டியிருந்ததால், அவரை ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியவில்லை என்று சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *