உலகம்

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே அமைந்துள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் (Sweetwaters) பகுதியில், நேற்று இரவு , துப்பாக்கித் சன்னங்கள் துளைத்த வாகனம் ஒன்றில் எட்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

சில மணி நேரங்களின் பின்னர், தென்னாப்பிரிக்காவின் தலைநகரான பிரிட்டோரியாவுக்கு அருகில் உள்ள ஜெஃப்ஸ்வில்லி (Jeffsville) என்ற சட்டவிரோத குடியிருப்பில் ஒன்பது பேர் இறந்து கிடந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

 

ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின் உடல்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடிசை ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்டன.

 

530 கிலோமீட்டர் (330 மைல்) தூர இடைவெளியில் இடம்பெற்ற இக்குற்றங்களுக்கான நோக்கங்களை புலனாய்வாளர்கள் இன்னும் கண்டறியவில்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

நாம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

 

நிச்சயமாக, நாம் இந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சமூகங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவோ அல்லது மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவோ நாம் அனுமதிக்க முடியாது என அந்த நாட்டு பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக கடுமையான வன்முறைக் குற்றங்களுடன் போராடி வந்தாலும், அண்மைக் காலமாக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *