வடக்கு ஆளுநர் வேதநாயகன் மீது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முறைப்பாடு

தற்போதைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ் மாவட்ட அரச அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் முறைகேடுகள் உள்ள நிலையில் அவை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊழல் ஆணைக் குழுவில் வெள்ளிக்கிழமை (30) முறைப்பாட்டை வழங்கினார்.
தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டுவரும் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் 2015 மார்ச் முதல் 2020 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக செயல்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலே குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன

பணம் துஸ்பிரயோகம்
குறித்த முறைப்பாட்டில் யாழ் மாவட்ட செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் நிதிமுறைகேடுகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டதன் மூலம் பல மில்லியன்கள் அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமைக்கான சமர்ப்பிக்கின்றோம்.
கணக்காய்வு ஆதாரங்களை தங்களின் விசாரணை மூலமாக ஆணைக்குழுவுக்கு நா.வேதநாயகனின் பொறுப்பின் கீழ் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பால் விநியோகத்திற்கான வலையமைப்பினை வலுவூட்டுதலும், பாலின் பெறுமதியினை அதிகரித்தலும் – யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் -திருநெல்வேலி. என்னும் வேலைத்திட்டத்தின் போது 6 மில்லியனுக்கும் அதிகமான பணம் துஸ்பிரயோகம் செயற்படுத்தப்பட்டுள்ளமை
07.07.2020 ஆம் திகதிய JF/A/QUE/KAC/VI/03/2020 ம் இலக்கம் கொண்ட அறிக்கை மூலம் யாழ்.மாவட்ட செயலகத்தின் பிரதான உள்ளக கணக்காய்வாளர் க.கமலரூபனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளிட்ட மேலும் சில ஆதரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அரச நிதி முறைகேடுகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டவரும் தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்படுவருமான நாகலிங்கம் வேதநாயகனின் ஊழல், மோசடிகள் தொடர்பில் விரைவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோமென குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()