3 சடலங்கள்.. 3 கடிதங்கள் ; மகன், மகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஆர்த்திபென் சோனி (47), அவரது 24 வயது மகன் நீல்காந்த் சோனி, 22 வயது மகள் ஜென்னி சோனி ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களின் தற்கொலை கடிதங்களில் பணப் பரிவர்த்தனை குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
3 சடலங்கள்.. 3 கடிதங்கள் ; மகன், மகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம் | Mother And Two Children Found Dead In Tragedy
இதன்மூலம் ரூ.33 லட்சம் கடன் சுமையும், இரண்டு கார்களுக்கு இன்ஸ்டால்மென்ட் பாக்கியும் அவர்களுக்கு இருந்தது தெரியவந்துள்ளது.
தங்கள் வீட்டை விற்று கடன்களை அடைக்கவும் அவர்கள் ஆலோசித்தது தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பண நெருக்கடியால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவமனையை இக்குடும்பம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.
கணவர் ஓராண்டுக்கு முன் மாரடைப்பில் உயிரிழந்த நிலையில் ஆர்த்திபேன் மகன் மற்றும் மகளுடன் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.
ஆர்த்திபேன் தனது கணவர், தாய், தந்தை, சகோதரன் ஆகியோரை இழந்தது அவருக்கும் அவரின் பிள்ளைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
![]()