இலங்கை

குற்றச்சாட்டினை ஏற்ற ஜோன்ஸ்டன்;  நவம்பர் 11 இல் தீர்ப்பு

வரி செலுத்தாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அதிசொகுசு காரை வைத்திருந்தமை தொடர்பாக தன்மீதான குற்றச்சாட்டுகளை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் காரின் பாகங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கு அதனை பொறுத்தி செய்யப்பட்ட சொகுசு பிஎம்டபிள்யூ காரொன்று 2024 செப்டம்பர் 20ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 2024 அக்டோபர் 23 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வரி செலுத்தாமல் நாட்டிற்குள் காரை கொண்டுவந்தமை, வரி முறைகேடு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இதன்படி இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த வழங்கு தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *