இலங்கை

ஏர்பஸ் வழக்கு: நாமலை நவம்பர் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சஷ  நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய இந்த வழக்கில், பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *