கவிதைகள்
அமைதியின் வழியில்… கவிதை… முத்தழகு கவியரசன் , திருநெல்வேலி

தொழிற் வளர்ச்சி
செய்தியில்
இலக்கிய வளர்ச்சி
விழாவில்
கல்வி வளர்ச்சி
உரையில்
இதோடு
சேர்த்துக் கொண்டது
பசி வளர்ச்சி
தெருவில்…
இதன்
புள்ளி விவரங்கள்
ஏறுகிறது.
வயிற்று பள்ளங்கள்
குமுறுகிறது.
பொய்யான பேச்சுகளுக்குள்
ஆழமான மௌனங்கள்
அமைதியின் வழித்தேடி
விடுதலையின் கதவு
மர்மமாகிறது…

![]()