இலங்கை

ஹோட்டல் சந்திப்பு பெரும் சூழ்ச்சியா?; அரசு கண்டுகொள்ளவில்லை என்கிறார் அமைச்சர் நளிந்த

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளின் செயற்பாடுகள் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை என்று  அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நனிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் சம்பவமொன்று தொடர்பில் வெளியாகியள்ள சீசீடிவி வீடியோ காட்சிகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ் வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் சம்பவமொன்று தொடர்பில் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அங்கு முன்னாள் புலனாய்வு பிரதானி, பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானி மற்றும் முன் னாள் அமைச்சர் ஒருவர் இருப்பது போன்றே தெரிகின்றது. இது போன்றே உயிர்த்த
ஞாயிறு தாக்குதலும் திட்டமிடப்பட்டது.

இதனால் இங்கு நடந்த சம்பவம் சூழ்ச்சி யா? இதற்கு பின்னால் வெளிநாடொன்றில் இருந்து பணப் பரிமாற்றம் இடம் பெற் நுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தியுள்ளதா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்யைில்,

கண்டியில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலும் பின்னர் அங்கிருந்து விகாரை மஹாதேவி பூங்கவுக்கும் அங்கிருந்து கிங்ஸ் பெரி வரையில் நடந்த விடயங்களில் எதி லும் மறைவுகள் இருக்கவில்லை. அனைத் தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விஹாரமகாதேவி பூங்காவில் வெளிவந்த விடயங்கள் தொடர்பில் பிரச்சினை இல்லை யென்றால் கிங்ஸ்பெரியில் நடந்த விடயங் களும் பிரச்சினையாக இருக்காது. இவை ரதாரண விடயமாகும். இது தொடர்பில் அர சாங்கம் அதிக கவனம் செலுத்தவதில்லை.

இதே வேளை தேசிய வைத்தியசாலை தொடர்பில் அவர்கள் குறிப்பிட்டுள்ள விட யங்கள் தொடர்பிலும் சுகாதார அமைச்சோ அல்லது வைத்தியசாலையோ கண்டு கொள்ளவில்லை. தேசிய வைத்தியசாலை கள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவர்களுக்கு ஊடகங்களை தம் பக்கம் திருப்ப வேண்டிய தேவை இருந்தது. இப்போது அந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வரு கின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *