இலங்கை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்திற்கு எதிராக, மக்கள் போராட்ட இயக்கமும் நீர்கொழும்பு மக்களும் இணைந்து ஜன அரகல இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தலைமையில் நீர்கொழும்பு நகரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அழகான வாழ்க்கைக்கு பயங்கரவாத சட்டம் தேவையா?, அடக்கு முறை சட்டங்களை சுருட்டிக்கொள் போன்ற சுலோக அட்டைகளை ஆர்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.

இந்த சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

வசந்த முதலிகே ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதற்காக அல்ல, மாறாகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

ஆனால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் நோக்கம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் அதிகாரத்தை அதிகரிப்பதே எனக் குற்றம் சாட்டினார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *