இலங்கை

சாட்சிகள் இல்லாமல் நாமல் சிறை வைப்பு; பிணை வழங்க மறுப்பு

அரசாங்கத்தின் அனைத்துவிடயங்களும் தோல்வியடையும் போது அரசாங்கம் அடக்குமுறையை கையில் எடுத்து வருகிறது.தேரர்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதுடன் ராஜபக்சவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது. என பொதுஜன பெரமுன எம்.பி.யான டி.பி சானக்க தெரிவித்தார்.

இடம்பெற்ற விசர்நாய்க்கடி நாேயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் பேசுகையில்,

நாமல் ராஜபக்ச எந்த சாட்சியும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டால், அது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தால், பிணை வழங்கப்படும். ஆனால் நாமலுக்கு அந்த சட்டம் செயற்படுவதில்லை. லஞ்ச, ஊழல் வழக்குகளில் பிணை வழங்குவதற்கு விசேட காரணம் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் அவருக்கு பிணை வழங்காமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. நாமலின் விசாரணைகள் முடிவடைந்தும் அவருக்கு பிணை வழங்கப்படுவதில்லை என்றால், அங்கு அவருக்கு நீதி கிடைப்பதில்லை. நீதிமன்றத்துக்குள்ளும் நீதி கிடைக்காவிட்டால் எங்கு நீதி கிடைக்கப்போகின்றது ?ஆனாலும் நீதிமன்றம் தொடர்பில் நாங்கள் இப்போதும் நம்பிக்கை வைக்கிறோம். நீதிமன்றம் தொடர்பில் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.

தமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால், எதனையும் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது. ஆனால் நாட்டில் இன்று எரிவாயு இல்லை. மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது அறிமுகப்படுத்திய கியூஆர் முறை இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் 4.2 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது இது 5.3 ஆகவே இருந்தது. அதேநேரம் நேர் பெறுமானத்தில் இருந்த பணவீக்கம் தற்போது மறைபெறுமானமாக வீழ்ச்சியடைந்து தற்போத நூற்றுக்கு 8வீதமாக மாறியுள்ளது.

அதேபோன்று பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. வைத்தியசாலைகளில் மருந்து இல்லை. அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள பணம் எடுத்துச்செல்ல வேண்டி இருக்கிறது. வைத்தியசாலைகளில் வைத்தியர்களும். ஊழியர்களுமே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்

மேலும் தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு காரணமாக 18 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. ஆனால் அரசாங்கம் 16 பில்லியன் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. அப்படியானால் எஞ்சிய 2பில்லியன்களை அரசாங்கம் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்போகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கொள்கலன்களை விடுவித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி மாட்டிக்கொண்டுள்ளார். சபாநாயகருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 50 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 3காேடி ரூபா தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகிறது. ஆனால் லஞ்ச ஊழலை நிறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

அரசாங்கத்தின் அனைத்துவிடயங்களும் தோல்வியடையும் போது அரசாங்கம் அடக்குமுறையை கையில் எடுத்து வருகிறது.தேரர்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதுடன் ராஜபக்சவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனை தவிர வேறு எதனையும் அரசாங்கம் செய்வதில்லை.என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *