இந்தியா

விடுதலையான மறுநாளே CJP தலைவர்கள் விசாரணைக்கு அழைப்பு

இந்தியாவின் டெல்லியில், காக்ரோச் ஜனதா கட்சியின் (Cockroach Janata Party – CJP) தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு டெல்லி பொலிஸாரின் குற்றப்பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

ஜந்தர் மந்தர் பகுதியில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பான விசாரணைக்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் வியாழக்கிழமை (22) நண்பகல் 12 மணியளவில் டெல்லியின் ராஜௌரி கார்டன் பகுதியில் அமைந்துள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அனுமதி நீக்கப்பட்டிருந்த போராட்டப் பகுதிக்குள் தனியார் வளாகம் ஊடாக அத்துமீறி நுழைந்ததாகவும், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், விசேட நிறைவேற்று நீதவான் நீதிமன்றம் இருவரையும் தலா 50,000 இந்திய ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணை மற்றும் பிணையாளர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் புதன்கிழமை (21) விடுவிக்க உத்தரவிட்டது.

விசாரணை நிறைவடையும் வரை அமைதியைப் பேணுவதுடன், சட்டத்தை மதித்து நடப்பதாகவும், சட்டரீதியாக அனுமதி வழங்கப்படும் வரை ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றும் இருவரும் நீதிமன்றத்தில் எழுத்துமூல உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *