ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி தமிழகத்தில் 48 அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு; வட – கிழக்கு ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல் பிரதிநிதிகளின் 20 நாள் பயணம்

வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 10 பெண்கள், ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,
தமிழ்நாட்டில் 48-க்கும் மேற்பட்ட அரசி யல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிதி திகளைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் கஆம் திகதி தமிழ்நாட்டுக்குப் பயணமான இந்தப் பெண் கன், 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஈழத் தமிழ் மக்களின் குரலாக பல்வேறு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்க ளைச் சந்தித்து, இலங்கையில் ஈழத் தமிழர்
சந்தித்து வரும் அவலங்கள் பற்றி விபரமா கக் கூறி அறிக்கைகள் கையளித்ததுடன் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக வலியுறுத்தினர்.
இதன்போது, தி.மு.க. முன்னாள் தலை வரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்மு ருகன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் புதுச்சேரி முதல மைச்சர் ந.ரங்கசாமி புதுச்சேரி அமைச்சர்
பெ.ராஜவேலு முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் இரா.பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ் வி.விக்னேஸ்வரன், மலேசியா வின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி, தருமபுரி சட்டமன்றத் தொகு தியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்பு மணி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள், புலவர்கள், சட்டத்தரணிகள், தொழிலதிபர்கள், வைத் தியர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்க ளையும் ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல் பிரதி நிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ கத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜெயல லிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொப்புள்கொடி பயணத்தைத் தொடர்ந்து இலங்கைக்குத் திரும்பிய பெண்கள், கடந்த வாரம் திருகோணமலையில் மாநாடு ஒன் றையும் நடத்தியுள்ளனர்.
குறித்த மாநாட்டில் மதகுருமார்கள், திரு கோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராஜா, மட்டக்களப்பு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறீநேசன் மற்றும் இ. சிறீநாத். அம்பாறை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்க. கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் ர.விஜயதர்சினி, ஓய்வுநிலை அதிபர், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்திப் புகள் மற்றும் கலந்துரையாடல்களின் ஊடாக ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளைப் பரந்துபட்ட தரப்பின ரிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
![]()