இலங்கை

யாழ்ப்பாணத்தில் உள்ள டக்ளஸின் அலுவலத்தில் நீண்ட நேர தீவிர தேடுதல்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் நேற்று திங்கட்கிழமை ஈடுபட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் (முன்னைய ஸ்ரீதர் திரையரங்கு)மற்றும் வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவாகச் சல்லடைபோட்டு தேடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல மணி நேரம் நீடித்த இந்தத் தேடுதலின் நிறைவில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *