இலங்கை

பீரிஸிடம் இன்று விசாரணை;  இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அழைப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தன்னை குறித்த ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் நடத்திய கலந்துரையாடலொன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே தனக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்றைய தினத்தில் தான் அந்த ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலமளிக்கவுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2009 இல் மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றய காலத்தில் சர்வதேச மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் இலங்கையின் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்த முக்கிய தலைவராக ஜீ.எல்.பீரிஸ் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *