இந்தியா

பங்களாதேஷ் பாணியில் இந்தியாவில் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி

நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பங்களாதேஷ் பாணியிலான ஆட்சி மாற்றத்தை (Bangladesh-style regime change) கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயல்வதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து லக்னோவி ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசியல் மோதல்களுக்காக நாட்டின் இளைஞர்களை எதிர்க்கட்சிகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி குழப்பத்தை விளைவிக்க முயல்கின்றன.

வங்கதேச நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சிலர் ஆட்சி மாற்றத்தைக் கோருகின்றனர்; வேறுசிலர் அரசைக்கவிழ்க்க வெளிப்படையாக அறைகூவல் விடுக்கின்றனர்.

இதன் மூலம் அரசியலமைப்பு நிறுவனங்களைச் சிதைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றவே அவர்கள் முயல்கின்றனர் என்பது தெளிவாகிறது.

பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் opportunism மூலம் அரசியலமைப்பு நிறுவனங்களை இழிவுபடுத்துவதை விடுத்து, மக்கள் தீர்ப்பை மதித்து தனது அரசியல் பங்கு குறித்து ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்ய வேண்டும்.” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *