கவிதைகள்
“அருள்வாய் துர்க்கை அம்மா தாயே” ….. கவிதை ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மலைமகள் துதி

![]()
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா.

ஆணவம் இல்லா வீரம் வேண்டும்
அகந்தை இல்லாத் துணிவு வேண்டும்
மாநிலம் வாழ்ந்திட உறுதி வேண்டும்
மனமுருகி வேண்டுகிறேன் தந்திடு தாயே
உடலில் உறுதி உள்ளத்தி லுறுதி
அமைந்திடத் துர்க்கையே அருளிடு தாயே
தயவும் வேண்டும் தாட்சண்யம் வேண்டும்
தளரா வாழ்வும் அமைந்திட வேண்டும்
குலையா உறுதி அலையா மனது
நிலையாய் இருக்க அருளிடு தாயே
சிதையா பக்தி நிலையாய் இருக்க
அருள்வாய் துர்க்கை அம்மா தாயே
கள்ளம் இல்லா வீரம் வேண்டும்
கசடு அறியா வாழ்ந்திட வேண்டும்
உள்ளம் உயர்வாய் எண்ணிட வேண்டும்
உருகிக் கேட்கிறேன் தந்திடு தாயே !
![]()