கவிதைகள்
நீ வீசிசென்ற வலி…. கவிதை… முல்லைஅமுதன்

உன்னிடம் கோபப்பட்டுக்கொள்கிறேன்.
பல சமயங்களில்
அமைதியாகிவிடுகிறேன்.
என் மீதான குற்றச்சாட்டுகளை
நீதிமன்றங்களால் நிறுபிக்கமுடியாது.
கடந்துவந்த பாதைகளின்
நோவுகளும்,
நீ வீசிசென்ற வலிகளும்
என்னிடமேயே தங்கிவிட்டனவே.
என்ன செவ்யேன் தோழியே..
வாழ்ந்துவிட்டுப்போகிறேனே…
கொஞ்சம் கவிதைகளையாவது
எறிந்துவிட்டாவது போனால்
இறந்துவிடுவேன். பிறகு வந்து புதைத்துவிடு
விரும்பினால் எரித்துவிடு.
போதும்.
![]()