கவிதைகள்
“அடுத்து முயன்றால் அமைவது வெற்றியே ” … கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

தோல்விகள் கண்டு துவண்டிட வேண்டாம்
தோல்வியில் தோய்ந்தால் வெற்றியைத் தொடலாம்
எடுத்த எடுப்பில் எதுவுமே நிகழா
அடுத்து முயன்றால் அமைவது வெற்றியே
வெற்றியைத் தொட்டவர் வேதனைப் பட்டவர்
வேதனை சோதனை வெற்றியின் படிகளே
பிறப்பில் வெற்றியைக் கொண்டா பிறக்கிறோம்
பிறந்தபின் அனைவரும் வெற்றியைத் தேடுறோம்
எவரெஸ்டைத் தொட்டிட எத்தனை முயற்சி
எவரெஸ்டைத் தொட்டிட எத்தனை பயிற்றி
அயர்விலா முயற்சியே வெற்றியைத் தொட்டது
அயர்ந்துமே வீழ்ந்தால் அடைவது தோல்வியே
வெளிச்சம் தந்திடும் பல்பைக் கண்டிட
எடிசன் எடுத்த முயற்சிகள் எத்தனை
தோல்வியே தோல்வி ஏமாற்றம் கவலை
தூக்கியே எறிந்தார் எடிசன் எழுந்தார்
விண்ணிலும் வெற்றி மண்ணிலும் வெற்றி
எண்ணில் அடங்கா எத்தனை வெற்றி
தோல்வியைக் கண்டா துவளா பலபேர்
தொடர்ந்த முயற்சியே இத்தனை வெற்றியே !
![]()