இலங்கை

ரணில் மீது தாக்குதல் நடத்த முயற்சியா?; அவரது பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி வெளியே வந்த வேளையில், அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது தனியார் ஊடக நிறுவனமொன்றின் வீடியோ படப்பிடிப்பாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வாயிலுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போதே தாக்குதலுக்கு இலக்கான அதிகாரி, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

சம்பந்தப்பட்ட வீடியோ படப்பிடிப்பாளர் வீடியோ கருவி மூலம் பாதுகாப்பு அதிகாரியின் தலையில் தாக்கும் விதம், அங்கு நின்றிருந்த ஏனைய பல ஊடகவியலாளர்களின் கமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏதேனும் வகையில் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன் திட்டம் ஏதேனும் இருந்ததா என்ற சந்தேகத்தை இது எழுப்புவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு அதிகாரியின் பணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகவியலாளர் நடந்துக்கொண்டதாகவும் , இதன்போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அதிகாரி கொம்பனித்தெரு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பான காணொலிக் காட்சி தற்போது வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *