சிறையிலேயே வாழ்நாளை முடித்துக்கொள்ளபோகும் ராஜபக்சர்கள்

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் சிறையில் அடைக்கப்பட்டு, தமது வாழ்நாளை அங்கேயே முடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
இடதுசாரி மையம் ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த சமீர பெரேரா, தமது குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் திருட்டு மற்றும் முறைகேடான செயற்பாடுகளுக்கு வழிநடத்தியதன் தவிர்க்க முடியாத விளைவாகவே இந்த நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம் முழு நாட்டுக்கும் வலுவான செய்தியொன்று கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தை சீரழித்ததற்கான முக்கிய அடையாளமாக ராஜபக்ச மாஃபியா குடும்பம் மாறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உலக வரலாற்றில் ஒரு குடும்பம் முழு நாட்டையும் முற்றாக வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றிருந்தால், அது அவர்கள் குடும்பம் மட்டுமே என உலகம் முழுவதும் அறியப்பட்ட விடயம் என்றும் சமீர பெரேரா தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, ராஜபக்ச குடும்பத்தை அரசியலில் இருந்து முற்றாக அகற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
![]()