இலங்கை

எயார்பஸ் வழக்கு: நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

எயார்பஸ் (Airbus)கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ   (29)  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவும், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்காகவுமே அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

குறிப்பிட்ட ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *