இலங்கை

அர்ச்சுனா, ஹரிஸ் உள்ளிட்ட அறுவருக்கு நீதிமன்றம் அழைப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக அவதூறு பரப்பிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் வைத்தியர் தொடர்பான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிருவதற்கும் பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை குறித்து நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *