இலங்கை

சி.ஐ.டியின் அதிரடி விசாரணை: முகத்திரை கிழிந்து வெளிநாட்டுக்கு ஓடும் பெரும் புள்ளிகள்

தராசு பாராமல், பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்படும் என்பதை தங்களது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நிரூபித்துள்ள என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பகாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தங்களை ஒருபோதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரிக்காது என்றும், நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வராது என்றும் நினைத்துக் கொண்டிருந்த பெரும் புள்ளிகள், இன்று நீதிமன்றப் படிகளை மிதிக்கவும், விசாரணைகளில் இருந்து தப்பிக்க சிங்கப்பூருக்கு ஓடவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாரம்பரிய குடும்ப பின்னணி

 

பாரம்பரிய குடும்ப பின்னணி அல்லது அரசியல் பலம் மூலம் தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, சட்டம் தங்களை நெருங்க முடியாது என நினைத்தவர்களின் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த காலங்களில் ஒரு சில குழுக்கள் மற்றும் கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நாடு, தற்போது மக்களின் ஆட்சியாக மாற்றப்பட்டுள்ளது. அத்தோடு, வெறும் பாலங்கள் மற்றும் மதகுகளைக் கட்டுவது மட்டும் ஒரு நாட்டின் வளர்ச்சியாகாது.

ஊழல், மோசடி, வீண் விரயம் மற்றும் இனவாதம் அற்ற ஒரு நல்ல அரசியல் கலாச்சாரம் முழுமையாக உருவாகும்போதுதான் நாடு உண்மையான முன்னேற்றமடையும்.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளையும், போதைப்பொருள் வர்த்தகத்தையும் ஒழிக்க வேண்டுமெனில் NPP அரசாங்கத்தால்தான் முடியும் என்ற மக்களின் நம்பிக்கையைத் தாங்கள் நிறைவேற்றுவோம்” என அவர் உறுதியளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *