இலங்கை

தமிழ் மக்கள் மத்தியில் NPP அரசுக்கான ஆதரவு அலை அதிகரிப்பு

“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின்போது இருந்த ஆதரவைவிடவும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.”- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நேற்றுடன் ஈராண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாட்டில் பிரபுக்கள் மற்றும் குடும்பத்தின் ஆட்சியே இருந்தது. எமது அரசாங்கமே மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். எனவேதான் கடந்த இரு வருடங்களில் மக்களுக்காக முடிவுகளை எடுத்துவருகின்றோம். உறுதிமொழிகளை நிறைவேற்றிவருகின்றோம்.

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குரிய மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எமது அரசாங்கம்மீது சந்தேக பார்வை வைத்திருந்தவர்களும் உண்மை நிலைவரத்தை அறிந்த பின்னர் ஆதரவளித்துவருகின்றனர்.

மலையகம், வடக்கு, கிழக்கிலும் இருந்ததைவிடவும் எமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.” – என்றார் ரில்வின் சில்வா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *