இலங்கை

அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு செய்தால் சட்டச் சிக்கல்கள் வரும்;  பொதுஜன பெரமுன செயலாளர் எச்சரிக்கை

முன்னர் இருந்த நிலைப்பாட்டில் இப்போது அர்ச்சுனா எம்.பி இல்லை. இதனால் அவருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பவர்கள் அதற்கான காரணத்தை நிரூப்பிக்க வேண்டும். இல்லையேல் முறைப்பாடுகளை செய்பவர்கள் சட்டப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நெரிடும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகார காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சாகர காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது காரியவசம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அந்தக் கூட்டத்தில் கூறியவை ஊடாக அவர் ஒருகாலத்தில் பிரிவினை வாதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்துள்ளார். இப்போது அவர் இப்போது அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பதனையே கூறியுள்ளார் என்பதே எனக்கு தெரிகின்றது. எவ்வாறாயினும் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்பவர்கள் அந்த முறைப்பாட்டுக்கான காரணத்தை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு சட்டத்தின் முன்னால் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *