இலங்கை

அர்ச்சுனா எம்.பி.க்கு மனநோய் பாதிப்பு; அமைச்சர் லால்காந்த கூறுகிறார்

அர்ச்சுனா இராமநாதன் எம்.பியின் செயற்பாடுகள் ஏனைய எம்.பிக்களைவிடவும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இவர் ஏதேனும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளவராக இருக்கலாம் என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேடையில் கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது லால்காந்த எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

அந்த எம்.பி பாராளுமன்றத்தில் நடந்துகொள்ளும் முறையில் மற்றைய அனைவரை விடவும் வித்தியாசம் உள்ளது. அவர் வைத்தியராக இருந்தாலும் அவருக்கு ஏதாவது மனநோய் பாதிப்பு ஏதும் இருக்கின்றதா? என்று தெரியவில்லை. சிலர் அதனை பைத்தியம் என்றும் கூறுவர்.

அவ்வாறு வேறு எவரிடமும் இல்லாத மாற்றங்கள் அவரிடம் உள்ளது. இவ்வாறானவர்கள் தொடர்பில் கருணையுடனேயே பார்க்க வேண்டும். அவரை அந்த நிலைமையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவ்வாறான ஒருவர் கூறும் கருத்துக்களால் சமூகத்தில் மக்கள் குழப்பமடையவோ, இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுவது போன்றோ தெரியவில்லை என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *