பலதும் பத்தும்

ஒன்ராறியோவின் முதல் AI இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்

ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் தணிகாசலம் 2018ஆம் ஆண்டில் இருந்து மூன்றாவது முறையாக ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

அத்துடன் 2023ஆம் ஆண்டில் ஒன்ராறியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ் அரசியல்வாதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அவர் முன்னதாக 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கான இணை அமைச்சராகவும், 2024ஆம் ஆண்டில் வீட்டுவசதிக்கான இணை அமைச்சராகவும், சமீபத்தில் சுகதாரா இணை அமைச்சராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *