கவிதைகள்

“அனைவருமே அவனியிலே வரலாறாய் ஆகிவிட்டார்” … கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
          மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
                  மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 
பொருளும் வேண்டும் அருளும் வேண்டும்
பொருள் கூடினால் அருளொதுங்கி விடும்
அருளோடு இணையும் பொரு ளென்றும்
நிறை வாகும் நிம்மதியை நல்கிவிடும்
 
இவ்வுலகில் வாழ பொருள் வேண்டும்
அவ்வுலகில் அமர அருள் வேண்டும்
இவ்வுலகும் சிறக்க அவ்வுலகும் சிறக்க
அறமோடு பொருள் இணைதல் அவசியமேயாகும் 
 
பொருளுக்காய் வாழுதல் பொய்யான வாழ்க்கை
அருளுக்காய் வாழுதல் அழியாத வாழ்க்கை
ஓடியோடி தேடிடினும் ஒன்றுமே கூடவரா
கூடவரக் கூடியது அருட்செல்வம் ஒன்றே 
 
செல்வந்தர் வாழ்ந்தார்கள் சீமான்கள் வாழ்ந்தார்கள் 
வரலாற்றில்  அவரெல்லாம் வந்திடவே  இல்லை
அருளாளர் வாழ்ந்தார்கள் அறமணைத்து மகிழ்ந்தார்கள்
அனைவருமே அவனியிலே வரலாறாய் ஆகிவிட்டார்  !

Loading

2 Comments

  1. என்றென்றும் நிலைத்துவிட அருள் ஒன்றே துணையாகும். அருள் இல்லா பொருளாளர் இருந்த இடம் தெரியாமல் மாண்டிட்டார். அருளோடு வாழ்ந்து அவனியிலே புகழ் பெறுவோம்.

    1. அருள் இல்லா பொருளாளர் இருந்த இடம் தெரியாமல் மாண்டிட்டார். என்றென்றும் நிலைத்துவிட அருள் ஒன்றே துணையாகும்.
      அருளோடு வாழ்ந்து அவனியிலே புகழ் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *